/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நுகர்பொருள் வாணிப கழகம் முன் உறுதியான வாறுகால், பாலம் அவசியம்
/
நுகர்பொருள் வாணிப கழகம் முன் உறுதியான வாறுகால், பாலம் அவசியம்
நுகர்பொருள் வாணிப கழகம் முன் உறுதியான வாறுகால், பாலம் அவசியம்
நுகர்பொருள் வாணிப கழகம் முன் உறுதியான வாறுகால், பாலம் அவசியம்
ADDED : ஆக 13, 2024 12:24 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் அதிக எடையுடன் லாரிகள் சென்று வருவதால் அதற்கேற்றவாறு உறுதியாக வாறுகால் பாலம் அமைக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் உள்ளது. இங்கிருந்து அருப்புக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளுக்கு ரேஷன் பொருட்கள் லாரிகள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. தினமும் இங்கு பத்துக்கு மேற்பட்ட லாரிகள் வந்து செல்லும். 50 டன்னுக்கு குறையாமல் ரேஷன் பொருட்களை இந்த லாரிகள் கொண்டு வந்தும், எடுத்தும் செல்கின்றன.
வாணிப கழக கட்டடத்திற்கும் முன்பு வாறுகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. பணி முடிந்த பின் வாறுகால் மீது சிமெண்ட் ஸ்லாப்புகளை வைத்து மூடிவிடுவர். ஆனால் நுகரும் பொருள் வாணிப கழகத்தின் வழியாக செல்லும் அதிக எடையை தாங்கும் வகையில் வாறுகால், பாலம் உறுதியாகவும் தரமான முறையில் கட்டப்பட வேண்டும். இங்கு மட்டும் சிமெண்ட் ஸ்லாப் போடாமல் உறுதியான பாலம் கட்ட வேண்டும்.
ஏனெனில் வாறு காலை கடந்து செல்லும் வாகனங்கள் அதிக எடை உள்ள பொருட்களை டன் கணக்கில் கொண்டு செல்லும். வெறும் சிமெண்ட் ஸ்லாப்புகளை வைத்து மூடினால், அதன் மீது லாரிகள் செல்லும் பொழுது உடைந்து விடும் அபாயம் உள்ளது. அதனால் இந்த பகுதியில் மட்டும் தரமான உறுதியான பாலம் அமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

