/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
என்.ஐ.டி.,யில் அரசு பள்ளி மாணவி
/
என்.ஐ.டி.,யில் அரசு பள்ளி மாணவி
ADDED : ஜூலை 14, 2024 05:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம், : ராஜபாளையத்தை சேர்ந்த அரசு பள்ளி மாற்றுத்திறனாளி மாணவி ஜே.இ.இ., தேர்வில் வெற்றி பெற்று திருச்சி என்.ஐ.டி., யில் சேர்ந்து பாராட்டை பெற்றுள்ளார்.
ராஜபாளையம் ஒய்ம்புலி தெருவை சேர்ந்த ஜவுளிக்கடை வேலை பார்க்கும் பாக்கியராஜ், வீட்டு வேலை பார்க்கும் கவிதா தம்பதியின் மகள் ஆர்த்தி 17, மாற்றுத்திறனாளி.
எஸ்.எஸ்.அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ பயின்ற இவர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் சென்னையில் பயிற்சி பெற்று ஜே.இ.இ., தேர்வு எழுதி 58.52 சதவீதம் பெற்று திருச்சி என்.ஐ.டி.,யில் சேர தேர்வாகியுள்ளார்.