/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பேஸ்மென்ட் வீக்கால் இடிந்து விழுந்த புதிய இரண்டு மாடி வீடு
/
பேஸ்மென்ட் வீக்கால் இடிந்து விழுந்த புதிய இரண்டு மாடி வீடு
பேஸ்மென்ட் வீக்கால் இடிந்து விழுந்த புதிய இரண்டு மாடி வீடு
பேஸ்மென்ட் வீக்கால் இடிந்து விழுந்த புதிய இரண்டு மாடி வீடு
ADDED : மே 12, 2024 01:53 AM

விருதுநகர்:விருதுநகர் ஏ.டி.பி., காம்பவுண்ட் 3வது தெருவில் சுந்தரபாண்டியன் என்பவருக்கு சொந்தமான பழைய வீட்டின் பேஸ்மென்ட் மீது புதிய வீட்டை கட்டியதால் பாரம் தாங்க முடியாமல் புதிய இரண்டு மாடி வீடு இடிந்து விழுந்தது.
விருதுநகர் ஏ.டி.பி.,காம்பவுண்ட் 3வது தெருவைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவருக்கு சொந்தமாக அதே பகுதியில் 1988ல் கட்டப்பட்ட வீடு உள்ளது.
இந்த வீட்டை இடித்து விட்டு 700 சதுர அடியில் புதிய வீடு கட்டுவதற்கான பணிகளை மூன்று மாதங்களுக்கு முன்பு துவங்கியுள்ளனர். இதற்காக பழைய வீட்டின் கூரை, சுற்றுச்சுவர்கள் இடிக்கப்பட்டு பணிகள் நடந்தது.
ஆனால் புதிய வீட்டிற்கு ஏற்றாற் போல பேஸ்மென்ட் அமைக்காமல், பழைய பேஸ்மென்ட் மீது புதிய வீட்டிற்கான கட்டுமான பணிகளை செய்துள்ளனர்.
தற்போது புதிய இரண்டு மாடி வீட்டிற்கான கட்டுமானப் பணிகள்,சுவர் பூச்சுகள் முடிந்து பணிகள் இறுதி கட்டத்தை எட்டியது. மேலும் அடுத்த வாரம் கிரகப்பிரவேசம் செய்வதற்கான பணிகள் மும்மரமாக நடந்தது.
இந்நிலையில் நேற்று காலை 7:00 மணிக்கு புதிய இரண்டு மாடி வீடு இடிந்து விழுந்தது. இதில் அருகாமையில் இருந்த வீடுகள், மின் வயர்கள், மின்கம்பங்கள், தெருவில்நிறுத்தப்பட்டிருந்த சைக்கிள், டூவீலர் கட்டட இடிபாடுகளில் சிக்கி சேதமாகியது.
இந்த விபத்தின் போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.கட்டுமானத்தை துவங்கும் போது பழைய பேஸ்மென்ட் அகற்றாமல் அதன் மீது புதிய வீட்டிற்கான கட்டடப்பணிகளை மேற்கொண்டதால் பாரம் தாங்க முடியாமல் வீடு இடிந்து விழுந்ததாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.