/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு தொழில் பிரச்னைகளுக்கு சட்டப்பூர்வமாக நிரந்தர தீர்வு
/
பட்டாசு தொழில் பிரச்னைகளுக்கு சட்டப்பூர்வமாக நிரந்தர தீர்வு
பட்டாசு தொழில் பிரச்னைகளுக்கு சட்டப்பூர்வமாக நிரந்தர தீர்வு
பட்டாசு தொழில் பிரச்னைகளுக்கு சட்டப்பூர்வமாக நிரந்தர தீர்வு
ADDED : ஏப் 16, 2024 03:38 AM
விருதுநகர்: பட்டாசு தொழிலுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு சட்டப்பூர்வமாக நிரந்தர தீர்வு காண்பது உட்பட 46 தேர்தல் வாக்குறுதிகளை விருதுநகர் தொகுதி தே.மு.தி.க.,வேட்பாளர் விஜய பிரபாகரன் சார்பாக பிரேமலதா வெளியிட்டுள்ளார்.
விருதுநகரில் அவர் வெளியிட்டுள்ள தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் கூறியிருப்பதாவது; காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டம் மீண்டும் துவங்க நடவடிக்கை, மதுரை - திருமங்கலம் இடையே மெட்ரோ ரயில் சேவை துவங்க அழுத்தம் தருவது, எம்.பி., நிதியில் அம்மா உணவங்களுக்கு புதிய தளவாட சாமான்கள் வழங்கி புதுப்பிப்பது, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் போர்க்கால அடிப்படையில் விரைவாக நிறைவு செய்வது, அறிவிக்கப்பட்ட ஜவுளி பூங்காவை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது, பட்டாசு தொழிலுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு சட்டப்பூர்வமாக நிரந்தர தீர்வு காண்பது, குல்லுார்சந்தை, ஆனைக்குட்டம், பிளவக்கல், இருக்கன்குடி அணைகள் புனரமைக்கப்பது, வீடற்ற ஏழைகளுக்கு மத்திய அரசின் திட்டத்தில் வீடு வழங்க நடவடிக்கை எடுப்பது,
சிவகாசி ரிங் ரோடு பணிகளை விரைந்து முடிப்பது, சாத்துாரில் நலிவடைந்து வரும் பேனா நிப்பு தயாரிக்கும் தொழிலுக்கு புத்துயிர் அளிப்பது, 6 சட்டசபை தொகுதிகளிலும் அலுவலகம் அமைத்து பொதுமக்கள் சிரமமின்றி பிரச்னைகள் கூற வழிவகை, கணினி மையம், தையல் பயிற்சி மையம் அமைத்து பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவது உள்ளிட்ட 46 வாக்குறுதிகளை வெளியிட்டார்.

