/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பயன்பாட்டில் இல்லாத ரேஷன் கடையை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை
/
பயன்பாட்டில் இல்லாத ரேஷன் கடையை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை
பயன்பாட்டில் இல்லாத ரேஷன் கடையை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை
பயன்பாட்டில் இல்லாத ரேஷன் கடையை செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை
ADDED : மே 04, 2024 04:48 AM

சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக 10 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத ரேஷன் கடையை செயல் பாட்டிற்கு கொண்டு வர வட்ட வழங்கல் அலுவலர் நடவடிக்கை எடுத்தார்.
சிவகாசி இந்திரா நகரில் 280 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
இப்பகுதி மக்கள் எளிதில் ரேஷன் பொருட்களை பெறுவதற்காக இந்திரா நகரில் 10 ஆண்டுகளுக்கு முன்பு 7.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டது.
ஆனால் கட்டப்பட்ட நாளிலிருந்து இந்த கட்டடம் பயன்பாட்டிற்கு வரவில்லை.
எனவே இக்கட்டடம் சேதம் அடைந்து வருவதோடு தனியார் சிலரின் ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி விட்டது.
இதனால் இந்திரா நகர் மக்கள் விஸ்வநத்தம் ஊராட்சி முனீஸ்வரன் காலனியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்குகின்றனர்.
இரண்டு கிலோமீட்டர் துாரம் உள்ள அங்கு சென்று ரேஷன் பொருட்கள் வாங்கி வருவதற்கு வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
எனவே இந்திரா நகரில் உள்ள ரேஷன் கடை கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனதினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக சிவகாசி வட்ட வழங்கல் அலுவலர் ராஜீவ் காந்தி பயன்பாட்டில் இல்லாத ரேஷன் கடையை நேரில் ஆய்வு செய்தார்.
அவர் கூறுகையில், சேதமடைந்த கட்டடத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். விரைவில் ரேஷன் கடை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.
இதனால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.