/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பணி முடிந்தும் பணம் கிடைக்காமல் ஒப்பந்ததாரர்கள் அலைக்கழிப்பு
/
பணி முடிந்தும் பணம் கிடைக்காமல் ஒப்பந்ததாரர்கள் அலைக்கழிப்பு
பணி முடிந்தும் பணம் கிடைக்காமல் ஒப்பந்ததாரர்கள் அலைக்கழிப்பு
பணி முடிந்தும் பணம் கிடைக்காமல் ஒப்பந்ததாரர்கள் அலைக்கழிப்பு
ADDED : மே 07, 2024 04:58 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வளர்ச்சி பணிகளை செய்து முடித்தும் அதிகாரிகள் மெத்தனத்தால், பில் வாங்க முடியாமல் ஒப்பந்ததாரர்கள் அலைகழிக்கப்படுகின்றனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் டெண்டர் மூலம் விடப்படும் வளர்ச்சி பணிகளை செய்ய 20க்கும் மேற்பட்ட ஒப்பந்தகாரர்கள் உள்ளனர். இவர்கள் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், சிறுபாலம் கட்டுதல், சிமென்ட் ரோடு அமைத்தல், பேவர் பிளாக் கற்கள் பதித்தல், கட்டடம் கட்டுதல் உட்பட, பணிகளை பலரும் கோடி ரூபாய் நிதியில் செய்துள்ளனர்.
பணி முடிந்து 6 மாதத்திற்கு மேல் ஆகியும் ஒப்பந்ததாரர்களுக்கு உரிய 'பில்' களை 'பாஸ்' செய்யாமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டுகின்றனர். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு ஒப்பந்ததாரர்கள் நடையாய் நடக்க வேண்டியுள்ளது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்காக மாவட்டத்தில் உள்ள பி.டி.ஓ.,க்கள் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். வரும் ஜூன் 4க்கு பிறகு மீண்டும் அவர்கள் மாற்றம் செய்யப்பட உள்ளதால், ஒப்பந்ததாரர்களின் 'பில்'களை 'பாஸ்' செய்வதில் அக்கறை காட்டுவது இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடன் வாங்கி பணி செய்தும் பணம் வாங்க நடையாய் நடக்க வேண்டியுள்ளதே என ஒப்பந்தக்காரர் புலம்புகின்றனர்.
அருப்புக்கோட்டை பி.டி.ஓ., ரவி: மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. அதனால் ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. மத்திய அரசிடமிருந்து பணம் வந்தவுடன் ஒவ்வொரு பில்லாக ரிலீஸ் செய்யப்படும்.