/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மில் தொழிலாளர் குழந்தைகளுக்கு உதவி
/
மில் தொழிலாளர் குழந்தைகளுக்கு உதவி
ADDED : செப் 17, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம், : ராஜபாளையம் ராம்கோ குரூப் ராமராஜூ சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நுாற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தொழிலாளர் நல அதிகாரி கவுதமன் வாழ்த்தினார். 416 குழந்தைகளுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவி தொகையினை தலைமை நிதி அதிகாரி விஜய கோபால் தொடங்கி வைத்தார். பொது மேலாளர் சுந்தர்ராஜ், மனித வள துணைப் பொது மேலாளர் எட்வின் ஜார்ஜ் வழங்கினர். தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். மனிதவளத்துறை வைரக்கனி நன்றி கூறினார்.