ADDED : ஆக 18, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜபாளையம், : ராஜபாளையம் பி.ஏ.சி ராமசாமி ராஜா தொழில்நுட்பக் கல்லுாரி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.
சங்கத் தலைவர் சந்திரசேகர் ராஜா வரவேற்றார். கல்லுாரி ஆட்சி மன்ற தலைவர், ராம்கோ குரூப் தலைவர் பி ஆர் வெங்கட்ராமராஜா தலைமை வகித்து வாழ்த்தினார். தாளாளர் ஸ்ரீகண்டன் ராஜா முன்னிலை விகித்தார். கோவை வொய்த் குரூப் நித்தியானந்தன் பேசினார்.
1967ல் படிப்பை முடித்த சென்னை சேர்ந்த சண்முக வேலாயுதனுக்கு சிறந்த முன்னாள் மாணவருக்கான விருது வழங்கப்பட்டது. 1974ல் படிப்பை முடித்த முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளை நிறைவு பெற்றதையொட்டி சிறப்பு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். முதல்வர் சீனிவாசன் வாழ்த்தினார். துணைத்தலைவர் ராஜ்குமார் நன்றி கூறினார்.