/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மேட்டமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்ற எதிர்பார்ப்பு
/
மேட்டமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்ற எதிர்பார்ப்பு
ADDED : மே 16, 2024 06:00 AM
சாத்துார் : சாத்துார் அருகே மேட்ட மலையில் ரோட்டை ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சாத்துார் -- சிவகாசி ரோட்டில் உள்ளது மேட்ட மலை ஊராட்சி. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஊராட்சியில் வசிக்கின்றனர். இங்கு தனியார் பாலி டெக்னிக் கல்லுாரி, அரசு , தனியார், கலைக் கல்லுாரி, தனியார் பி.எட்., கல்லுாரி, தனியார் மெட்ரிக் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
இதனால் காலை மாலை நேரத்தில் மாணவர்களால் இப்பகுதி போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலையுள்ளது. இந்த நிலையில் மேட்டமலையில் ரோட்டின் ஓரத்தை ஆக்கிரமித்து பாஸ்ட் புட் கடைகள், டீக்கடைகள், அந்திக்கடைகள், ஓட்டல்கள் பல உருவாகியுள்ளன.
ஏற்கனவே சிவகாசிக்கு அதிகளவில் கனரக வாகனங்கள், லோடு ஆட்டோ, கார், வேன்கள் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும் நிலையில் ரோட்டின் ஒரத்தில் ஆக்கிரமித்து போடப்பட்டுள்ள கடைகளால் மேலும் நெரிசல் அதிகரிக்கும் நிலை உள்ளது. எனவே ரோட்டின்ஓரத்தில் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற வேண்டும்.