/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முன்பணத்தை கேட்டவர் மீது தாக்குதல்
/
முன்பணத்தை கேட்டவர் மீது தாக்குதல்
ADDED : செப் 18, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி : நரிக்குடி உச்சனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த செல்வராணி 34. விறகு வெட்டும் தொழில் செய்ய 4 ஆண்டுகளுக்கு முன் அதே ஊரைச் சேர்ந்த ராமரிடம் ரூ. 87 ஆயிரம் முன் பணம் கொடுத்தார். இது நாள் வரை வேலைக்கு வரவில்லை. பலமுறை பணத்தை கேட்கும் கொடுக்கவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வராணி, கணவர் பாக்கியராஜ், ராமர் வீட்டிற்கு சென்று பணத்தை கேட்டபோது தகராறு ஏற்பட்டு, கம்பால் தாக்கி காயப்படுத்தினர். ராமர், பிரியா, மகேஷ், கதிர், ஆஷா ஆகியோர் மீது கட்டணுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

