/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மல்லாங்கிணரில் ஒரு மாதமாக செயல்படாத ஏ.டி.எம்., சிரமத்தில் வாடிக்கையாளர்கள்

ADDED : மே 24, 2024 01:52 AM
காரியாபட்டி: மல்லாங்கிணரில் ஒரு மாதமாக ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்., செயல்படாததால் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாமல் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மல்லாங்கிணரில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் ஏ.டி.எம்., வசதி உள்ளது. உள்ளூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க வசதியாக இருந்தது.
இந்நிலையில் ஒரு மாதமாக ஏ.டி.எம்., செயல்படவில்லை. அவுட் ஆப் சர்வீசில் உள்ளது. ஆத்திர அவசரத்திற்கு பணம் எடுக்க முடியாமல் வாடிக்கையாளர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வங்கியில் நீண்ட நேரம் காத்திருந்து பணம் எடுக்க வேண்டி இருக்கிறது. மற்ற நேரங்களில் விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று எடுக்க வேண்டி இருக்கிறது. எனவே பழுதாகி உள்ள ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்.,யை உடனடியாக பழுது நீக்கி செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.