நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகரில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், மக்கள் கூட்டமைப்பு சார்பில் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கூட்டமைப்பு நிறுவனர் கருப்பையா தலைமையில் நடந்தது.
வழக்கறிஞர் தாளமுத்தரசு 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற 7 மாணவர்களுக்கு தங்கப்பதக்கம், பரிசுகளை வழங்கினார். பிளஸ் 2 வில் 550 மதிப்பெண், 10ம் வகுப்பில் 460 மதிப்பெண் பெற்ற 53 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட தலைவர் வேலாண்டி, ராஜ பேகன், மாவட்ட அமைப்பாளர் சோனை முத்து உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.