ADDED : ஜூலை 20, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் கே.வி.எஸ்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கருவூலம் சார்பில் வருமான வரி பிடித்தம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட கருவூல அலுவலர் சுந்தர் தலைமையில் நடந்தது.
மதுரை சரக வருமான வரி துணை ஆணையர் மதுசூதனன், வருமான வரி அலுவலர் வெங்கடேசன், அலுவலர்கள் கலந்து கொண்டு முறையாக வரிப்பிடித்தம் செய்வது எப்படி, வரிப்பிடித்தம் செய்பவர்களின் கடமைகள், அவர்களின் பொறுப்புகள், வரிப்பிடித்த விதிகளை முறையாகப் பின்பற்றவில்லை என்றால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து விளக்கி கூறினர். இதில் 250க்கும் மேற்ப்பட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

