/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
படுமோசமாக இருக்கும் ரயில்வே ஸ்டேஷன் ரோடு
/
படுமோசமாக இருக்கும் ரயில்வே ஸ்டேஷன் ரோடு
ADDED : ஆக 06, 2024 04:33 AM

நரிக்குடி: படு மோசமாக இருக்கும் நரிக்குடி ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் வாகனங்கள் குலுங்கி செல்வதால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சீரமைக்க பயணிகள் வலியுறுத்தினர்.
அருப்புக்கோட்டை, மானாமதுரை மார்க்கமாக செல்லும் ரயில் வழித்தடத்தில் நரிக்குடியில் ரயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. அப்பகுதி மக்கள் சென்னை, செங்கோட்டை மானாமதுரை, திருச்சுழி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட
ஊர்களுக்கு ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். ரயில் வரும் நேரங்களில், வாகனங்களில் ஸ்டேஷனுக்கு வருகின்றனர். நரிக்குடி திருப்புவனம் ரோட்டில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு ஒரு. கி.மீ., தூரத்திற்கு ரோடு உள்ளது. ரோடு போட்டு பல ஆண்டுகளானதால் தற்போது ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாகி பள்ளமாக உள்ளதால், மழை நேரங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. வாகனங்கள் குலுங்கி செல்வதால் பயணிகள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். வாகனங்களின் டயர்களை பதம் பார்க்கின்றன. இதனை கருத்தில் கொண்டு படு மோசமாக இருக்கும் ரோட்டை சீரமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.