/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருத்தங்கல் பேட்டை தெருவில் பாலம் கட்டும்பணி துவக்கம்
/
திருத்தங்கல் பேட்டை தெருவில் பாலம் கட்டும்பணி துவக்கம்
திருத்தங்கல் பேட்டை தெருவில் பாலம் கட்டும்பணி துவக்கம்
திருத்தங்கல் பேட்டை தெருவில் பாலம் கட்டும்பணி துவக்கம்
ADDED : மார் 04, 2025 06:46 AM
சிவகாசி: தினமலர் நாளிழிதழ் செய்தி எதிரொலியாக திருத்தங்கல் பேட்டை தெருவில் பாலம் கட்டும் பணி துவங்கியது.
திருத்தங்கல் ஐந்தாவது வார்டு பேட்டை தெரு வழியாக செல்லும் ஓடை சேதம் அடைந்திருப்பதாலும், இதன் பாலத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் நடந்து செல்லவே மக்கள் அச்சப்பட்டனர். இந்நிலையில் ஓடையில் பாலம் கட்டுவதற்காக ஒரு ஆண்டிற்கு முன்பு ரூ. 20 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டது. ஆனாலும் பணிகள் துவங்கவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். எனவே ஓடையில் உடனடியாக பாலம் கட்ட வேண்டும் என தினமலர்நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பேட்டை தெருவில் பாலம் கட்டும் பணி துவங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.