/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்ஜெட் தாக்கல் நேரடி ஒளிபரப்பு
/
பட்ஜெட் தாக்கல் நேரடி ஒளிபரப்பு
ADDED : மார் 09, 2025 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழக சட்டசபை கூட்டத்தொடர் மார்ச் 14ல் துவங்குகிறது. அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை நேரடியாக பார்க்கும் வகையில் மக்கள் கூடும் இடங்களில் எல்.இ.டி. திரை அமைத்து ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
இதற்காக மாநகராட்சி பகுதிகளில் 2 இடங்களிலும், நகராட்சி பகுதிகளில் ஒரு இடத்திலும் திரை அமைக்கப்பட்டு மக்கள் பார்க்க ஏதுவாக நிழற்பந்தல், குடிநீர் வசதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.