/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சட்டப் பணிகள் ஆணை குழுவில் தன்னார்வலர் பணியிடங்களுக்கு அழைப்பு
/
சட்டப் பணிகள் ஆணை குழுவில் தன்னார்வலர் பணியிடங்களுக்கு அழைப்பு
சட்டப் பணிகள் ஆணை குழுவில் தன்னார்வலர் பணியிடங்களுக்கு அழைப்பு
சட்டப் பணிகள் ஆணை குழுவில் தன்னார்வலர் பணியிடங்களுக்கு அழைப்பு
ADDED : மே 10, 2024 11:55 PM
ஸ்ரீவில்லிபுத்துார் : விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமாரின் செய்தி குறிப்பு:
தமிழ்நாடு மாநில சட்டபணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வரும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் காலியாக உள்ள 2 உறுப்பினர் பதவிகளுக்கு மக்கள் சேவை பயன்பாட்டு துறையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த விருதுநகர் மாவட்டத்தை சார்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
பல்வேறு பொது பயன்பாட்டு சேவைகளில் தகுந்த அனுபவம் உள்ள ஓய்வு பெற்ற, 62 வயதுக்கு உட்பட்ட, தகுதியான நபர்கள் தற்காலிகமாக நியமனம் செய்ய ப்பட உள்ளனர்.
விருப்பமுள்ளவர்கள்ஜூன் 3 தேதிக்குள், தலைவர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர்-626 125' என்ற முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.