ADDED : மார் 12, 2025 06:38 AM

ராஜபாளையம்; ராஜபாளையம் சொக்கர் கோயில் மாசி மக பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு தேர்த்திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
மாசி மகத்தை முன்னிட்டு மார்ச் 3ல் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
தினமும் பல்வேறு அலங்காரங்களில் சுவாமி வீதி உலா வந்தவுடன் விழா நாட்களில் உற்ஸவருக்கு சிறப்பு அபிஷேகம், பன்னிரு திருமுறை பாராயண நிகழ்ச்சி, பாரம்பரிய இன்னிசை கச்சேரிகள் நடந்தது.
இதனைத் தொடர்ந்து திருக்கல்யாணம், தெப்போற்ஸவத்தை அடுத்து நேற்று காலை தேர்திருவிழா நடந்தது. கோயிலில் அலங்கரிக்கப்பட்ட தேரினை ராம்கோ குரூப் சேர்மனும் கோயில் பரம்பரை அறங்காவலருமான பி.ஆர். வெங்கட்ராமராஜா வடம் பிடித்து துவக்கி வைத்தார்.
ராம மந்திரம் வரை தரிசனத்திற்காக தேர் வீதி உலா வந்து கோயிலை சுற்றி நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை ராம்கோ குரூப் சார்பில் ஊழியர்கள் செய்திருந்தனர்.