/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
குண்டும் குழியுமாக சாத்துார் ரயில்வே ஸ்டேஷன் ரோடு
/
குண்டும் குழியுமாக சாத்துார் ரயில்வே ஸ்டேஷன் ரோடு
ADDED : செப் 15, 2024 12:15 AM

சாத்துார்: சாத்துார் ரயில்வே ஸ்டேஷன் ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சாத்துார் ரயில்வே ஸ்டேஷன் மூலம் தினமும் நுாற்றுக்கணக்கான பயணிகள் வெளியூர் சென்று வருகின்றனர்.
மேலும் வட இந்தியாவில் இருந்து சாத்துார் பகுதியில் செயல்பட்டு மில்கள் அட்டைக் கம்பெனிகள், பட்டாசு ஆலைகள், ஓட்டல்களில் பணிபுரிய வரும் வட இந்தியர்களும் வருகின்றனர்.
சாத்துார் மற்றும் சுற்றுக் கிராமங்களில் இருந்து கேரளாவிற்கு வேலைக்கு ரயிலில் சென்று வருகின்றனர்.
இதன் காரணமாக 24 மணி நேரமும் ரயில்வே ஸ்டேஷன் பகுதி மக்கள் நடமாட்டம் காணப்படுகிறது.
இந்த நிலையில் ரயில்வே ஸ்டேஷன் ரோடு குண்டும் குழியுமாக கரடு முரடாக உள்ளதால் இருசக்கர வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் போதுமான தெரு விளக்கு வசதி இல்லாததால் ரயில்வே ஸ்டேஷன் ரோடு இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
கரடு முரடாக குண்டும் குழியுமாக உள்ள ரோட்டில் நடந்து வரும் முதியவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம டைகின்றனர்.
சாத்துார் ரயில்வே ஸ்டேஷனை பயன்படுத்தும் பயணிகளும் வியாபாரிகளும் தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு பலமுறை ரோட்டை சீரமைக்க கோரிக்கை விடுத்தும் ரோடு போட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இனியும் காலம் தாழ்த்தாது புதியதாக ரோடு போட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.