/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
துணிப்பை பயன்படுத்துவோருக்கு தள்ளுபடி அறிவிக்கலாமே ஓட்டல் உரிமையாளர்களுக்கு கலெக்டர் அறிவுரை

ADDED : பிப் 28, 2025 07:18 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் துணிப்பை பயன்படுத்துவோருக்கு தள்ளுபடி அறிவிப்பது போன்ற புதிய யுத்திகளை பயன்படுத்தி பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கலாம் என ஓட்டல் உரிமையாளர்களுக்கு கலெக்டர் ஜெயசீலன் அறிவுரை வழங்கினார்.
விருதுநகர் ஸ்ரீவித்யா கல்லுாரியில் காலநிலை மாற்ற இயக்கம், மாவட்ட நிர்வாகம் இணைந்து மாவட்டத்தில் உள்ள ஓட்டல் உரிமையாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு யிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
இதில் கலெக்டர் ஜெயசீலன் பேசியதாவது: நகரங்களில் 10 ஆண்டுகளுக்கு முன் உணவுக்காக எத்தனை முறை வீட்டில் அடுப்பை பற்ற வைத்தனர் என்று ஒரு ஆய்வு எடுத்துப் பார்த்தால், ஒரு மாதத்திற்கு 90 முறை சாப்பிடுவதற்கு 50 முதல் 60 முறை அடுப்பை பற்ற வைத்தனர். ஆனால் இப்போது 20 முதல் 30 வரை என மாறிவிட்டது.
பெரும்பாலும் ஒருவேளை தான் வீட்டில் சமையல் செய்கின்றனர். வெளியில் உணவுப் பொருட்களை வாங்க வாய்ப்புகள் அதிகமுள்ளது. இந்த பார்சல் வாங்கும் கலாசாரம் அதிகரித்துள்ளது. உணவு நிறுவனங்கள் பிளாஸ்டிக் பைகளை குறைப்பதற்கும், வாடிக்கையாளர்கள் துணிப்பைகள் உபயோகிப்பதை ஊக்குவிக்கும் வகையிலும் தள்ளுபடி போன்ற புதிய யுத்திகளை கையாளலாம்.
கடைகளில் சுற்றுச்சூழல்களுக்கு தீங்கு விளைவிக்கும் நெகிழி பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என்ற முன்னெடுப்பு எடுக்க வேண்டும். இது துவக்கத்தில் கடினமாக இருந்தாலும், பிறகு அதுவே மக்களுக்கு பழகிவிடும், என்றார்.நேர்முக உதவியாளர் (விவசாயம்) நாச்சியார் அம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.