நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நரிக்குடி : நரிக்குடி பகுதியில் தச்சனேந்தல் கிராமத்தில் எம்.எல்.ஏ., நிதியின் கீழ் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை, உழுத்திமடையில் கிருதுமால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம், சமுதாயகூடம் புனரமைப்பு, சிறுவனூரில் சமுதாயக்கூடம், புல்வாய்கரையில் அங்கன்வாடி மையம், நாலூர் கிராமத்தில் புதிய துணை சுகாதார மையம் உள்ளிட்ட பணிகளை கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
கட்டனூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்து கேட்டார். திட்ட இயக்குனர் தண்டபாணி உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.