/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் புகார்: மாணவிக்கு சான்றிதழ்
/
சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் புகார்: மாணவிக்கு சான்றிதழ்
சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் புகார்: மாணவிக்கு சான்றிதழ்
சட்டப் பணிகள் ஆணைக் குழுவில் புகார்: மாணவிக்கு சான்றிதழ்
ADDED : ஜூலை 20, 2024 12:13 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா அத்திகுளத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். 11ம் வகுப்பு படிக்கும் இவரது மகள் மகாலட்சுமியின் பிறப்பு சான்றிதழில் பெயர் பதியாத நிலை இருந்தது. இதற்காக மனு அளித்து ஒரு வருடத்திற்குமேலாகியும் பெயர் பதிந்த பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் ஜூன் 27ல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில்செந்தில்குமார் மனு அளித்திருந்தார். இதனை ஆணை குழு தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமார், செயலாளர் தலைமை குற்றவியல் நீதிபதி பிரித்தா விசாரித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக பெயர் பதிவு செய்த பிறப்பு சான்றிதழ் வழங்க உத்தரவிட்டனர்.
அதன்படி பெயர் பதிவு செய்த பிறப்பு சான்றிதழை அதிகாரிகள் சட்டபணிகள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்தனர். அதனை மாணவி மகாலட்சுமியிடம், நீதிபதி ஜெயக்குமார், நீதிபதி பிரித்தா வழங்கினர். அவர்களுக்கு மகாலட்சுமி குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.