sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

தமிழகம், கேரள மலைப்பகுதிகளில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நிறைவு

/

தமிழகம், கேரள மலைப்பகுதிகளில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நிறைவு

தமிழகம், கேரள மலைப்பகுதிகளில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நிறைவு

தமிழகம், கேரள மலைப்பகுதிகளில் வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நிறைவு


ADDED : மே 02, 2024 04:54 AM

Google News

ADDED : மே 02, 2024 04:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழகம் மற்றும் கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 3 நாட்களில் 30 இடங்களில் நடந்த ஒருங்கிணைந்த வரையாடுகள் கணக்கெடுப்பு பணி நேற்றுடன் நிறைவடைந்தது.

தமிழக அரசின் மாநில விலங்கான வரையாடுகள் ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை மற்றும் கேரள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிகளவில் காணப்படுகின்றன.

உயரமான மலை முகடுகள், குன்றுகள் மற்றும் அடர் வனப்பகுதியில் காணப்படும் இத்தகைய வரையாடுகள், சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி 3122 வரையாடுகள் இருப்பதாக தெரியவந்தது.

தமிழகத்தின் பல்வேறு வனப்பகுதியில் இருந்து வரையாடுகள் கேரளா வனப்பகுதிக்கு இடம் பெறுவதால் இங்கு அதன் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

அதனை தடுக்க 2022ல் தமிழக அரசு வரையாடுகள் பாதுகாப்பு திட்டத்தை அறிவித்தது. இதற்காக ரூ. 25 கோடி நிதி ஒதுக்கப்பட்டு தமிழகத்தில் வரையாடுகளின் வாழ்விடங்களை அடையாளம் கண்டு பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் மூலம் நாட்டிலேயே முதல்முறையாக இத்திட்டம் உருவாக்கப்பட்டு வரையாடுகளை பாதுகாக்கவும் அவன் வாழ்விடம் மேம்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் ஒரு கட்டமாக தமிழகம், கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் 30 இடங்களில் வரையாடுகள் கணக்கெடுக்கும் பணி ஏப். 29 காலை முதல் துவங்கி நேற்று (மே 1) மாலையுடன் முடிவடைந்தது.

அதன்படி மேகமலை புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியான ஸ்ரீவில்லிபுத்தூர் மலைப்பகுதியில் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் வத்திராயிருப்பு, சாப்டூர்

ஆகிய நான்கு வனப்பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறையினர் கடந்த மூன்று நாட்களாக கொளுத்தும் வெயிலிலும் மலை உச்சியில் உரையாடுகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் முதலியார் ஊத்து, பேய் மலை மொட்டை, வத்திராயிருப்பு வனப்பகுதியில் தொப்பி மலை, சாப்டூர் கோட்டை மலை பல இடங்களில் தங்கி பைனாகுலர் மூலம் வரையாடுகள் நடமாட்டத்தை பார்வையிட்டனர்.

மிக அருகில் காணப்பட்ட வரையாடுகளை போட்டோ எடுத்துள்ளனர்.

நேற்று மாலையுடன் கணக்கெடுப்பு பணி முடிந்து அடிவாரம் திரும்பிய வனத்துறையினர் இன்று தங்களது அலுவலகங்களில் நாங்கள் சேகரித்த வரையாடுகள் குறித்த விபரத்தை சமர்ப்பிக்கவுள்ளனர்.

இதனையடுத்து தான் வரையாடுகள் நடமாட்டம் எந்த அளவுக்கு காணப்படுகிறது என்பது தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us