/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ராஜிவ் ஜோதி யாத்திரைக்கு காங்., வரவேற்பு
/
ராஜிவ் ஜோதி யாத்திரைக்கு காங்., வரவேற்பு
ADDED : மே 19, 2024 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார், : சாத்துார் வந்த ராஜிவ் 33வது நினைவு ஜோதி யாத்திரைக்கு காங்., கட்சியினர் வரவேற்பளித்தனர்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவின் 33வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கர்நாடக காங்கிரஸ் தொழிலாளர் அமைப்பு சார்பில் ஜோதி யாத்திரை புறப்பட்டு தமிழகம் முழுவதும் சுற்றி வந்து ஸ்ரீபெரும்புதூர் சென்று யாத்திரை நிறைவடைகிறது.
நேற்று முக்குராந்தல் வந்த ஜோதி யாத்திரைக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜோதி நிவாஸ், நகரத் தலைவர் அய்யப்பன், தலைமையில் வட்டாரத் தலைவர்கள் , தொண்டர்கள், வரவேற்றனர்.

