
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர் : கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஆனந்த விநாயகர், பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு கும்பாபிஷேக விழா நடந்தது.
வேந்தர் ஸ்ரீதரன், இணைவேந்தர் அறிவழகி தலைமை வகித்தனர். மூன்று நாட்கள் புண்ணிய தீர்த்தங்கள் மகா கும்பங்களுக்கும், யந்திரங்களுக்கும் மகா யாக பூஜைகளை முத்துக்குமார் ஜலகண்டீஸ்வரர் சர்மா தலைமையில் நடந்தது. சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் கோபுர கலசங்களுக்கு பூஜை செய்து புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.
விழாவில் துணைத் தலைவர்கள் சசி ஆனந்த், அர்ஜுன் கலசலிங்கம், துணைவேந்தர் நாராயணன், பதிவாளர் வாசுதேவன் உட்பட பலர் பங்கேற்றனர்.

