/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
அருப்புக்கோட்டையில் பன்னீர் ரோஜா சாகுபடி
/
அருப்புக்கோட்டையில் பன்னீர் ரோஜா சாகுபடி
ADDED : ஜூலை 07, 2024 11:44 PM

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சுற்றுப்புற பகுதிகளில் பன்னீர் ரோஜா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
அருப்புக்கோட்டை அருகே தமிழ்பாடி, குலசேகரநல்லூர், மடத்துப்பட்டி, செம்பட்டி, கோவிலாங்குளம் உட்பட பகுதிகளில் மல்லிகை, கனகாம்பரம், பன்னீர் ரோஜா, பட்டன் ரோஸ் உட்பட பூக்கள் விளைவிக்கப்படுகிறது. அதிலும் பன்னீர் ரோஜா குலசேகர நல்லூர், மடத்துப்பட்டி பகுதிகளில் அதிக அளவில் விளைகிறது.
பன்னீர் ரோஜா சாகுபடி செய்யும் விவசாயி மாயாண்டி கூறுகையில், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்ற வேண்டும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை செடிகளை ட்ரிம் செய்ய வேண்டும். குடும்ப தொழிலாக செய்வதால் எங்களுக்கு கட்டுப்படியாகிறது. தினசரி பூக்களை பறித்து அருப்புக்கோட்டை பூ மார்க்கெட்டில் விற்கிறோம். முகூர்த்த நாட்களில் பூவிற்கு கிராக்கி ஏற்படும்.
இந்தப் பகுதியில் உள்ள செல்லங்குளம் கண்மாயை நன்கு தூர்வாரி பராமரித்தால் தண்ணீர் தேங்கும். கண்மாயை சுற்றி பூந்தோட்டங்கள் அதிகம் உள்ளது. கண்மாய் தண்ணீரை நம்பித்தான் விவசாயம் செய்கிறோம். கண்மாயில் தண்ணீர் வரத்து குறைந்து போனதால் பூஞ்செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற முடியாமல் சிரமப்படுகிறோம், என்றார்.