/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேதமான பயணியர் நிழற்குடை, சுகாதார வளாகம் இன்றி அவதி; மன வேதனையில் ஸ்ரீவி., டி.மானகசேரி ஊராட்சி மக்கள்
/
சேதமான பயணியர் நிழற்குடை, சுகாதார வளாகம் இன்றி அவதி; மன வேதனையில் ஸ்ரீவி., டி.மானகசேரி ஊராட்சி மக்கள்
சேதமான பயணியர் நிழற்குடை, சுகாதார வளாகம் இன்றி அவதி; மன வேதனையில் ஸ்ரீவி., டி.மானகசேரி ஊராட்சி மக்கள்
சேதமான பயணியர் நிழற்குடை, சுகாதார வளாகம் இன்றி அவதி; மன வேதனையில் ஸ்ரீவி., டி.மானகசேரி ஊராட்சி மக்கள்
ADDED : ஆக 20, 2024 06:53 AM

ஸ்ரீவில்லிபுத்துார் : சேதமடைந்த பயணியர் நிழற்குடை, அடிப்படை வசதி இல்லாத மயானம், சேதமடைந்த ரோடு, சுகாதார வளாகமின்றி அவதி என பல்வேறு சிரமங்களுடன் வசித்து வருகின்றனர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் டி.மானகசேரி ஊராட்சி மக்கள்.
மானகசேரி, சூடி புதுார் கம்மாபட்டி, இந்திரா நகர், கொங்கலாபுரம் கிராமங்களில் 1500 க்கும் மேற்பட்ட வீடுகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். சிவகாசி மெயின் ரோட்டில் விலக்கில் உள்ள பயணியர் நிழற்குடை இடிந்து விடும் நிலையில் காணப்படுகிறது.
மெயின் ரோட்டில் இருந்து ஊருக்குள் செல்லும் ரோட்டின் இருபுறமும் மின்விளக்குகள் இல்லாமல் இரவு நேரங்களில் இருண்டு காணப்படுகிறது. ஊருக்குள் வருவதற்கு போதிய பஸ்கள் இல்லாததால் மக்கள் 3 கி.மீ., தூரம் நடந்து வர வேண்டி இருக்கிறது.
இந்திரா நகரில் இருந்த குழந்தைகள் மையம் கட்டடம் இடிக்கப்பட்டு பல மாதங்களாகி புதிய கட்டிடம் கட்டி தரப்படாததால் தற்போது சமுதாய கூடத்தில் செயல்படுகிறது. மானகசேரியில் மயானம் சேதமடைந்து எந்தவித அடிப்படை வசதியும் இல்லை. ஆண்கள், பெண்களுக்கு சுகாதார வளாகம் வசதி இல்லை. இருக்கும் ஒரு சுகாதார வளாகமும் புதர் மண்டி கிடக்கிறது. ஜெ.ஜெ. நகரில் இருந்து வெயில் வந்தாள் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் ரோடு பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது.
முள்ளிகுளத்தில் இருந்து கம்மாபட்டிக்கு செல்லும் பாதையில் பாலம் இல்லாததால் மழை நேரத்தில் தண்ணீர் தேங்கி மக்கள் சிரமத்திற்கு ஆளாகும் சூழல் காணப்படுகிறது.
முள்ளி குளத்தில் இருந்து கம்மாபட்டிக்கு செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தில் மழை பெய்து தண்ணீர் வரும்போது மக்கள் வெளியேற முடியாது சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே கம்மாபட்டி மக்கள் எளிதில் வந்து செல்ல வசதியாக ரோடு, பாலம் அமைத்து தர வேண்டும்.
- -செல்ல பாண்டியன், குடியிருப்பாளர்.
மானகசேரி ஜெ.ஜெ. நகரில் இருந்து வெயில் வந்தாள் குடியிருப்பு பகுதி வரையுள்ள தார் ரோடு பல ஆண்டுகளாக சிதைந்து காணப்படுகிறது. ரோடு போட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
- -சுந்தர்ராஜ், குடியிருப்பாளர்.
மானகசேரியில் சமுதாயக்கூடம் இல்லாமல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே ஒரு சமுதாயக்கூடம் கட்டி தர வேண்டும். மேலும் ஆண்கள், பெண்களுக்கு நவீன சுகாதார வளாகம் கட்டித்தர ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -கருப்பசாமி, குடியிருப்பாளர்.
மெயின் ரோட்டில் புதிய பயணியர் நிழற்குடை, மயானத்தில் குளியல் தொட்டி உட்பட அடிப்படை வசதிகள் செய்தல், ஜெ.ஜெ. நகர் ரோடு சீரமைத்தல், சுகாதார வளாகங்கள், சமுதாயக்கூடம் அமைத்தல், மின்னழுத்த குறைபாடு நீக்கம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை ஊராட்சி ஒன்றியத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உள்ளேன். இதில் ஊராட்சி ஒன்றியம் எம்.எல்.ஏ. நிதி ஆகியவற்றின் கீழ் சில வேலைகள் செய்யப்பட்டுள்ளது.
- செல்ல பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்.