/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முன்னேற துடிக்கும் வட்டாரமாக திருச்சுழி அறிவிப்பு சம்பூர்ணதா அபியான் திட்டத்தில் இலக்குகள் நிர்ணயம்
/
முன்னேற துடிக்கும் வட்டாரமாக திருச்சுழி அறிவிப்பு சம்பூர்ணதா அபியான் திட்டத்தில் இலக்குகள் நிர்ணயம்
முன்னேற துடிக்கும் வட்டாரமாக திருச்சுழி அறிவிப்பு சம்பூர்ணதா அபியான் திட்டத்தில் இலக்குகள் நிர்ணயம்
முன்னேற துடிக்கும் வட்டாரமாக திருச்சுழி அறிவிப்பு சம்பூர்ணதா அபியான் திட்டத்தில் இலக்குகள் நிர்ணயம்
ADDED : ஜூலை 11, 2024 04:35 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் முன்னேறத் துடிக்கும் வட்டாரமாக திருச்சுழி தேர்வு செய்யப்பட்டு இங்கு சம்பூர்ணதா அபியான் திட்டத்தின் கீழ் 6 குறியீடுகளில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு சார்பில் 112 பின்தங்கிய மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டதில் தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்கள் உண்டு. 81 குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு, இலக்குகளை நிறைவேற்ற 2018 முதல் பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இதை தொடர்ந்து தற்போது தேசிய அளவில் 500 பின்தங்கிய வட்டாரங்கள் நிதி ஆயோக் அமைப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, அதில் தமிழகத்தில் 16 வட்டாரங்களில் விருதுநகர் மாவட்டத்தில்திருச்சுழி வட்டாரமும் தேர்வாகி உள்ளது. 39 குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு இலக்கை அடைய பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சம்பூர்ணதா அபியான் திட்டத்தின் கீழ் விவசாயம், மருத்துவம், சுகாதாரம், ஊட்டச்சத்து, மகளிர் மேம்பாடு ஆகிய துறைகள் தொடர்புடைய ஆறு குறியீடுகளை நுாறு சதவீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இந்தாண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்பட உள்ளது. திருச்சுழியில் 40 ஊராட்சிகள் உள்ளன.
இவற்றில் உள்ள பெண் குழந்தைகளுக்கு ரத்த சோகையை தவிர்க்கும் வகையில், அவர்களுக்கான ஊட்டச்சத்துக்களை உறுதி செய்வது, இரும்புச்சத்து குறைபாடு இருப்பின் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இரும்புச்சத்து மாத்திரைகளை உட்கொள்வதை உறுதி செய்வது ஆகியவை கண்காணிக்கப்பட உள்ளது.
18 வயதுக்கு முன்பாக குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பதும் கண்காணிக்கப்பட்டு தடுக்கப்பட உள்ளது. மீறி கண்டறியப்பட்டால் அவர்களின் மீது கடும் நடவடிக்கையும் எடுக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட உள்ளது.
ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஏறக்குறைய மூன்றில் ஒருவருக்கு கண்டிப்பாக இருக்கிறது. இதற்கு காரணம் உணவு பழக்க வழக்கம். ரத்த அழுத்தம், நீரிழிவு என்பது ஒரு நோய் கிடையாது. உடல் செயலில் இருக்கக்கூடிய ஒரு மாற்றம். 40 வயதிற்கு மேற்பட்டோருக்கு இரு முறை பரிசோதனை செய்து உணவு கட்டுப்பாட்டு, மருத்துவ வசதி செய்ய ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
அதே போல் இப்பகுதிகளில் விவசாயிகள் மண் பரிசோதனை செய்து, அதற்கு ஏற்றாற்போல் பயிர் செய்ய வேண்டும். மண்ணின் தன்மை, சத்துக்களுக்கு ஏற்ப உரம் இட வேண்டும். இதனால் மகசூல் அதிகமாகும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அரசு வழங்கும் சுழல் நிதியை பெற்று அதன் மூலம் தொழில் செய்து, பொருளாதாரத்தை உயர்த்தவும், தொழில் துவங்க பயிற்சிகளும் வழங்கப்பட உள்ளது.இந்த ஆறு குறியீடுகளை வரும் 3 மாதங்களில் முழுமை அடைய செய்ய மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.