/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இயங்காத ரேஷன் கடைகள் தவிக்கும் வாடிக்கையாளர்கள்
/
இயங்காத ரேஷன் கடைகள் தவிக்கும் வாடிக்கையாளர்கள்
ADDED : மார் 25, 2024 06:39 AM
விருதுநகர், : ரேஷன் கடைகளை பொறுத்த வரையில் முதல் மாதத்தின் இரு ஞாயிற்று கிழமைகளில் கடை செயல்பட வேண்டும். இதற்காக முன்பே முதல் இருவெள்ளிக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.
மாதத்தில் கடைசி இரு ஞாயிற்று கிழமைகளில் தான் விடுமுறை உண்டு. பெரும்பாலான ரேஷன் கடைகள் இந்த விதியை பின்பற்றுகின்றன. சிவகாசி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில ரேஷன் கடைகள் மட்டும் முதல் இரு ஞாயிற்று கிழமைகளிலும் சரிவர இயங்குவதில்லை. பட்டாசு, நெசவு தொழிலாளர்கள் அதிகம் உள்ள இப்பகுதிகளில் ஞாயிற்று கிழமை கடைகள் மூடி கிடப்பதால் பொருட்கள் வாங்க முடியாமல் தவிக்கின்றனர். சிலர் மதியத்திற்கு மேல் பூட்டி விடுகின்றனர். எனவே ரேஷன் கடைகள் அறிவிக்கப்பட்ட காலங்களில் முறைப்படி திறப்பதை கூட்டுறவுத்துறை உறுதி செய்ய வேண்டும்.

