/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தாமதிக்கும் பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகளை --விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
/
தாமதிக்கும் பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகளை --விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
தாமதிக்கும் பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகளை --விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
தாமதிக்கும் பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகளை --விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு
ADDED : ஆக 03, 2024 04:31 AM
ராஜபாளையம்: ஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடிவடையாமல் தாமதிப்பதால் பெண்கள், முதியோர் உள்ளிட்ட பயணிகள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். குறைந்த பட்சம் பணிகள் முடிவடையும் வரை தற்காலிக நிழல் குடை, மொபைல் டாய்லெட் வசதியாவது ஏற்படுத்தி தர வேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்டை இடித்து புதிதாக அமைப்பதற்காக 2022 டிச. முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு 2023 ஜன. மாதம் இறுதியில் இடிக்கும் பணிகள் தொடங்கின.
சுமார் 2.90 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வணிக வளாகங்களுடன் கூடியதாக அமைக்கப்பட உள்ள பணிகளை இந்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் முடிக்க வேண்டும். ஆனால் பணிகள் தற்போது வரை முடிவடையாமல் இழுபறியாக தொடர்ந்து வருகிறது.
இதனால் தொடங்கியது முதலே மாணவியர், பெண்கள், முதியோர் உள்ளிட்டவர்கள் இயற்கை உபாதைகளுக்காக ஓட்டல்களை நாடுவதும் இயலாதவர்கள் சங்கடத்திற்கு உள்ளாவதும் தொடர்கிறது.
அத்துடன் வெயில், மழைக்காலங்களில் ஒதுங்க வழியின்றி கடைகளின் தாழ்வாரங்களில் நின்று செல்கின்றனர். முறையான போலீஸ் கண்காணிப்பு வசதி இல்லாததால் அருகில் உள்ள டாஸ்மாக்கில் இருந்து வரும் குடிமகன்களால் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையும் தட்டிக் கேட்க வழியின்றி பிரச்னை ஏற்படுகிறது.
பணிகளை தாமதிக்காமல் குறிப்பிட்ட கால இடைவெளியில் விரைந்து முடிப்பதுடன் அதுவரை மாணவிகள், பெண்களுக்கு அடிப்படை வசதியான மொபைல் டாய்லெட், தற்காலிக நிழற்குடை, போலீசார் கண்காணிப்பு ஏற்பாடு செய்ய நகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும்.