
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் : விருதுநகர் கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன் நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும் உட்பட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைவர் குமார் பாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் துணைத்தலைவர் கோபால், மாநில செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பால்முருகன், மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் போத்திராஜ் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.