/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பா.ஜ., தேசிய கொடியுடன் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு
/
பா.ஜ., தேசிய கொடியுடன் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு
பா.ஜ., தேசிய கொடியுடன் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு
பா.ஜ., தேசிய கொடியுடன் ஊர்வலத்திற்கு அனுமதி மறுப்பு
ADDED : ஆக 14, 2024 12:36 AM

அருப்புக்கோட்டை, : அருப்புக்கோட்டையில் பா.ஜ.,வினரின் வீடு தோறும் தேசிய கொடி ஏற்ற நடந்த விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், வேறு இடத்தில் ஊர்வலம் செல்ல முயன்ற 24 பேரை போலீசார் கைது செய்தனர்.
அருப்புக்கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிழக்கு மாவட்ட பா.ஜ., சார்பில் புளியம்பட்டி பகுதியில் இருந்து வெள்ளக்கோட்டை வரை தேசிய கொடியுடன் டூ வீலர் வாகன ஊர்வலம் செல்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். நேற்று காலை 11:00 மணியளவில் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் புளியம்பட்டியில் தேசிய கொடி ஏற்றி கட்சியினர் டூவீலர்களில் கூடினர்.
இதனையடுத்து டிஎஸ்பி., காயத்ரி தலைமையில் போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர். டூவீலர் ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது எனவும் புளியம்பட்டியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் உள்ள கோயில் வரை நடந்து செல்லலாம் என போலீசார் கூறினர். 500 மீட்டர் தூரம் வரை நடந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என பா.ஜ., நிர்வாகிகள் வலியுறுத்தினர். அதற்கு டி.எஸ்.பி., அனுமதி தர முடியாது என கூறினார்.
இதனையடுத்து தேசியக் கொடியுடன் கூட செல்ல முடியாத நிலையில் போலீசார் அராஜகம் உள்ளது,
நாங்கள் கலைந்து செல்கிறோம் என, பா.ஜ., வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பின்னர், போலீசாருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு காந்தி மைதானம் பகுதியில் இருந்து கூடி அங்கிருந்து டூவீலர்களில் தேசிய கொடியுடன் முழக்கங்கள் எழுப்பியவாறு பஜார் வழியாக வெள்ளகோட்டைக்கு சென்றனர்.
பா.ஜ., வினர் ஊர்வலம் செல்வதை எதிர்பாராத போலீசார் அவர்களை பின்னால் விரட்டி சென்றனர். வெள்ளக்கோட்டை பகுதியில் போலீசாருக்கும், கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், மாவட்ட பார்வையாளர் வெற்றிவேல் மாவட்ட பொதுச்செயலாளர் சீதாராமன், நகர தலைவர் முருகானந்தம் மற்றும் பிற பிரிவு நிர்வாகிகள் உட்பட 24 பேர்களை கைது செய்தனர்.