/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில்வே சுரங்கப்பாதைகளில் அடர்ந்துள்ள கருவேல முட்கள்
/
ரயில்வே சுரங்கப்பாதைகளில் அடர்ந்துள்ள கருவேல முட்கள்
ரயில்வே சுரங்கப்பாதைகளில் அடர்ந்துள்ள கருவேல முட்கள்
ரயில்வே சுரங்கப்பாதைகளில் அடர்ந்துள்ள கருவேல முட்கள்
ADDED : ஆக 03, 2024 04:34 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட கிராமப்புற ரயில்வே சுரங்கப்பாதைகளின் ஓரங்களில் அடர்ந்துள்ள கருவேல மரங்களால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.
மாவட்டத்தில் திருநெல்வேலிக்கும், செங்கோட்டை வழித்தடத்திற்கும் ரயில்வே தண்டவாளங்கள் செல்கின்றன. இவை பல்வேறு கிராமங்களுக்கு குறுக்காக அமைந்துள்ளதால் சுரங்கப்பாதை, கேட் போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் மழைக்காலங்களில் சுரங்கப்பாதைகளில் தேங்கும் மழைநீரால் கிராமங்களில் போக்குவரத்து துண்டாகிறது. இதனால் பள்ளிகள், மருத்துவமனைகளுக்கு செல்ல கிராம மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இன்று வரை இந்த சிக்கலுக்கு ரயில்வே நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் இவை பெரும்பாலும் கிராமப்புறங்களில் இருப்பதால் மழைநீர் வடியும் பராமரிப்பு சரிவர செய்யப்படாதது போல், பாதை ஓரங்களில் உள்ள கருவேல மரங்களும் அகற்றப்படாமல் உள்ளன. அவை சுவற்றை தாண்டி வளர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மக்கள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். இதை வரும் பருவமழைக்காலத்திற்குள் சரி செய்ய வேண்டும். தேங்கும் மழைநீரை வடியவும் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.