/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
371 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணையம் டி.ஜி.பி., சங்கர்ஜிவால் தகவல்
/
371 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணையம் டி.ஜி.பி., சங்கர்ஜிவால் தகவல்
371 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணையம் டி.ஜி.பி., சங்கர்ஜிவால் தகவல்
371 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணையம் டி.ஜி.பி., சங்கர்ஜிவால் தகவல்
ADDED : மார் 08, 2025 04:27 AM

மதுரை : விருதுநகர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு, குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மதுரையில் இருநாட்களாக டி.ஜ.பி., சங்கர் ஜிவால் ஆலோசனை நடத்தினார்.
தென்மண்டல ஐ.ஜி., பிரேம்ஆனந்த் சின்ஹா, எஸ்.பி. கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். டி.ஜி.பி., கூறியதாவது:
விருதுநகர் மாவட்டத்தில் கடந்தாண்டு 371 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டது. 5 பேர் நிபந்தனைகளை மீறியதற்காக பிணையை ரத்து செய்ததோடு அவர்களுக்கு பிணை ஜாமின் வழங்கிய 7 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குண்டர் சட்டத்தில் 9 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். 8 ரவுடிகளுக்கு ஆயுள் தண்டனையும், ஒரு ரவுடிக்கு கடுங்காவல் தண்டனையும் பெற்று தரப்பட்டது என்றார்.
நேற்று நடந்த கூட்டத்தில் 19 போலீஸ் அதிகாரிகள், போலீசாரின் குறைகளை டி.ஜி.பி., கேட்டறிந்தார். சிறப்பாக பணியாற்றிய 15 போலீசாருக்கு சான்றிதழ், வெகுமதி வழங்கினார்.