/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
7 ம் நூற்றாண்டை சேர்ந்த தாமரை மேல் முருகன் சிற்பம் கண்டு பிடிப்பு
/
7 ம் நூற்றாண்டை சேர்ந்த தாமரை மேல் முருகன் சிற்பம் கண்டு பிடிப்பு
7 ம் நூற்றாண்டை சேர்ந்த தாமரை மேல் முருகன் சிற்பம் கண்டு பிடிப்பு
7 ம் நூற்றாண்டை சேர்ந்த தாமரை மேல் முருகன் சிற்பம் கண்டு பிடிப்பு
ADDED : ஜூன் 30, 2024 06:10 AM

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையை சேர்ந்த மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதர், பேராசிரியர்கள் தாமரைக்கண்ணன், குமரன் ஆகியோர் விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் உள்ள பெரும்பாக்கம் கைலாசநாதர் சிவன் கோயிலில் ஆய்வு செய்தனர். அங்கு சண்டிகேஸ்வரர் சன்னதியில் வித்தியாசமாக இருந்த சிற்பத்தை ஆய்வு செய்த போது அது சண்டிகேஸ்வரர் சிலை அல்ல தாமரை மேல் அமர்ந்த முருகன் என தெரிய வந்தது.
சிற்பத்தை பற்றி கூறியதாவது : சிவபெருமான் நெற்றிக்கண்ணில் இருந்து 6 தீப்பொறிகள் வெளிவந்து தாமரை மலர் மேல் விழுந்து 6 குழந்தைகளாக மாறி அந்த குழந்தைகளை கார்த்திகை பெண்கள் எடுத்து வளர்த்தனர் என்பது புராண வரலாறு.
இதை நினைவு கூறும் விதமாக பல்லவர் காலத்தைச் சேர்ந்த சிற்பிகள் அனைவரும் முருகனை சிறுவனாக அதாவது குழந்தை சாமியாக வடிவமைத்தனர். இந்த சிற்பத்திற்கு கார்த்திகேயன் என்ற குமாரசாமி என அழைத்தனர்.
பல்லவர்களின் சிற்பக்கலையானது ஆரம்ப காலங்களில் புடைப்புச் சிற்பமாகவே வடிவமைக்கப்பட்டது. இந்தச் சிற்பமும் ஒரே கல்லில் புடைப்பு சிற்பமாக உள்ளது. தலையில் கரண்ட மகுடமாக செதுக்கப்பட்டுள்ளது.
இது தொப்பி போன்ற அமைப்புடன் காணப்படும். 2 காதுகளிலும் பத்திர குண்டலங்கள் உள்ளன. கழுத்தில் அணிகலன்களும் வீரச்சங்கிலி, மார்பில் ருத்ராட்ச மாலையும் இடுப்பில் உதர பந்தமும் காணப்படுகிறது.
வலது கையில் வேலும், இடது கை இடது தொடையில் ஊறு ஹஸ்தமாக வைத்திருக்கும் படி சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. அர்த்த பத்மாசன கோலத்தில் அமர்ந்திருக்கும் நிலையில் பல்லவ சிற்பிகள் நேர்த்தியாக செதுக்கியுள்ளனர்.
ஒரு குழந்தை கையில் வேலை பிடித்தபடி அமர்ந்தது போன்று காட்சி தருகிறது. சிற்பத்தின் அமைப்பை வைத்து பார்க்கும் போது 7, 8ம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதலாம் என கூறினர்.