/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விஜய கரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டெடுப்பு
/
விஜய கரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டெடுப்பு
விஜய கரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டெடுப்பு
விஜய கரிசல்குளம் அகழாய்வில் சங்கு வளையல்கள் கண்டெடுப்பு
ADDED : ஜூன் 30, 2024 02:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி:விருதுநகர் மாவட்டம் விஜய கரிசல்குளம், 3ம் கட்ட அகழாய்வில், சுடு மண்ணாலான பதக்கம், சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன.
விஜய கரிசல்குளத்தில், 3ம் கட்ட அகழாய்வில் உடைந்த நிலையில் சுடுமண் உருவ பொம்மை உள்ளிட்ட 220 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. நேற்றைய அகழாய்வில் சுடுமண்ணாலான பதக்கம், சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டன.
அகழாய்வு இயக்குனர் பாஸ்கர் பொன்னுச்சாமி கூறுகையில், ''சுடு மண்ணால் ஆன பதக்கம் பெண்கள் அணிகலனாக உள்ளது. மேலும் அலங்கரிக்கப்பட்ட சங்கு வளையல்களையும் பெண்கள் பயன்படுத்தியுள்ளது தெரிய வருகிறது,'' என்றார்.