/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கவுன்சிலர்கள் புறக்கணிப்பால் ரத்தான மாவட்ட ஊராட்சி கூட்டம்
/
கவுன்சிலர்கள் புறக்கணிப்பால் ரத்தான மாவட்ட ஊராட்சி கூட்டம்
கவுன்சிலர்கள் புறக்கணிப்பால் ரத்தான மாவட்ட ஊராட்சி கூட்டம்
கவுன்சிலர்கள் புறக்கணிப்பால் ரத்தான மாவட்ட ஊராட்சி கூட்டம்
ADDED : ஆக 23, 2024 03:32 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புறக்கணித்ததால் தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் ரத்தானது.
விருதுநகர் மாவட்ட ஊராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி வந்த நிலையில், மற்ற கவுன்சிலர்கள் யாரும் வரவில்லை. ஓரிருவர் மட்டுமே வந்திருந்தனர். கடந்த கூட்டத்தின் போது தி.மு.க., அ.தி.மு.க., கவுன்சிலர்கள் 15வது மாநில நிதி குழுமத்தின் நிதி ரூ.8 கோடியை தங்கள் நிர்வாக பணிக்கு ஒதுக்குவது உள்ளிட்ட 15 தீர்மானங்களை நிறைவேற்ற கோரினர். இந்நிலையில் மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி தீர்மான நோட்டை எடுத்து கொண்டு அலுவலகத்தில் இருந்தே காரில் வெளியேற முற்பட்டார்.
அப்போது மாவட்ட கவுன்சிலர்கள் அவரது காரை வழிமறித்து தர்ணாவில் ஈடுபட்டனர். அதற்கு பிறகு நேற்று நடந்த கூட்டத்தில் பிரச்னைகள் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கவுன்சிலர்களின் புறக்கணிப்பால் கூட்டம் ரத்தானது. இருப்பினும் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டிருந்தனர்.

