/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தி.மு.க., நிர்வாகி குத்திக்கொலை
/
தி.மு.க., நிர்வாகி குத்திக்கொலை
ADDED : ஏப் 18, 2024 12:52 AM

சாத்துார்:விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்த சத்திரப்பட்டி தி.மு.க., கிளை செயலாளர் தவிட்டு ராஜை 60, கத்தியால் குத்தி கொன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சத்திரப்பட்டியை சேர்ந்தவர் தவிட்டு ராஜ், தி.மு.க. கிளைச் செயலாளரான இவர் ரியல் எஸ்டேட் புரோக்கராகவும் இருந்து வந்தார். நேற்று மதியம் 12:30 மணிக்கு மண்குண்டாம்பட்டியில் உள்ள டீக்கடையில் டீ குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 மர்ம நபர்கள் தவிட்டு ராஜை கத்தியால் குத்தி தப்பிச் சென்றனர்.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
டி.எஸ்.பி. சுரேஷ்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரித்தார். வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

