/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சேசபுரம் மக்களுக்கு ஒரு மாதத்தில் இ--பட்டா
/
சேசபுரம் மக்களுக்கு ஒரு மாதத்தில் இ--பட்டா
ADDED : ஆக 10, 2024 06:23 AM
சிவகாசி : வத்திராயிருப்பு அருகே சேசபுரத்தில் ஆதிதிராவிடர் காலனியில் குடியிருக்கும் மக்களுக்கு ஒரு மாதத்தில் இ- பட்டா வழங்கப்படும் என சிவகாசி சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரன் உறுதி அளித்தார்.
வத்திராயிருப்பு அருகே சேசபுரத்தில் குடியிருந்து வரும் மக்களுக்கு இ- பட்டா வழங்குவதில் தாமதம், மேலும் அப்பகுதியில் வாறுகால் தெருவிளக்கு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி சிவகாசி சப் கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்த அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர்.
இதற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் வந்திருந்த மக்களிடம் டவுன் இன்ஸ்பெக்டர் புகழேந்தி பேச்சுவார்த்தை நடத்தினார்.
தொடர்ந்து சேசபுரம் மக்கள் சிவகாசி சப் கலெக்டர் பிரியா ரவிச்சந்திரனிடம் மனு கொடுத்தனர்.
அவர்களிடம் சப் கலெக்டர், ஒரு மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.