/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஓலைச்சுவடி வடிவில் தேர்தல் அழைப்பிதழ் பாக்கு, தாம்பூலத்துடன் ஓட்டளிக்க வரவேற்பு மாவட்ட நிர்வாகம் புதிய முயற்சி

ADDED : ஏப் 17, 2024 06:40 AM

விருதுநகர், : விருதுநகர் லோக்சபா தொகுதிக்கு நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி வெற்றிலை, பாக்கு, தாம்பூலத்துடன் ஓலைச்சுவடி வடிவில் அழைப்பிதழ் வழங்கி வரவேற்று புதிய முயற்சி செய்துள்ளது மாவட்ட நிர்வாகம்.
காரியாபட்டி கம்பிக்குடி மந்திரி ஓடையில் நரிக்குறவர் காலனியில் நேற்று லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசீலன், தாம்பூல தட்டில் வெற்றிலை, பாக்குடன் தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா என ஓலைச்சுவடி வடிவில் அமைக்கப்பட்ட அழைப்பிதழை 54 நரிக்குறவர் குடும்பங்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கி, நாளை மறுநாள்(ஏப். 19) தவறாமல் ஓட்டளிக்க அழைப்பு விடுத்தார்.
பனை ஓலையில் அச்சிடப்பட்டுள்ள இந்த அழைப்பிதழில், “அன்புடையீர் வணக்கம். நிகழும் மங்களகரமான திருவள்ளுவராண்டு 2055 சித்திரை 6ம் நாள் (ஏப். 19) வெள்ளிக்கிழமை நலம் தரும் நன்னாளில் காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணிவரை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் லோக்சபா தேர்தல் திருவிழா, தங்கள் அருகே உள்ள ஓட்டுச் சாவடியில் நடைபெறுகிறது.” என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், என் ஓட்டு விற்பனைக்கு அல்ல, நுாறு சதவீதம் தவறாமல் ஓட்டளிப்போம், இந்திய தேர்தல் ஆணையத்தின் அலைபேசி செயலிகள் குறித்த விவரங்கள், தேர்தல் தொடர்பான புகார்களுக்கு, தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்கள்04562 -252100, 04562 -221301, கட்டணமில்லா தொலைபேசி எண்-1800 425 2166, வாக்காளர் சேவை மையம் 1950 ஆகிய தகவல்களும் இந்த அழைப்பிதழில் இடம் பெற்றுள்ளன.
இதில் துணை கலெக்டர் முத்திரை பிரேம்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.