ADDED : மே 07, 2024 05:01 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை டிரஸ்ட் பதவிகளுக்கான தேர்தல் நடந்தது. மதுரை உயர்நீதிமன்ற ஓய்வு நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் நேற்று முன்தினம் உறவின்முறை தலைவர், உப தலைவர், தேவஸ்தான ட்ரஸ்டி பதவிகளுக்கு நடந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் அன்று மாலையே எண்ணப்பட்டது.
உறவின்முறை தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுதாகர் வெற்றி பெற்றார். உப தலைவராக சுரேஷ்குமார், தேவஸ்தான ட்ரஸ்டியாக கணேசன் ஆகியோரும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பாரதிதாசன் சான்றுகளை வழங்கினார்.
டி.எஸ்.பி., காயத்ரி, டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். வெற்றி பெற்ற உறவின் தலைவர் சுதாகருக்கு தொழிலதிபர்கள் காசி முருகன், சங்கரசேகரன், நிர்வாகத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.