/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊருக்குள் நுழைந்தது கரடி கூண்டுடன் தேடுதல் வேட்டை
/
ஊருக்குள் நுழைந்தது கரடி கூண்டுடன் தேடுதல் வேட்டை
ADDED : ஜூலை 10, 2024 02:20 AM
ராஜபாளையம்:விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரம் பஸ் ஸ்டாண்ட், மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டுள்ளது.
அப்பகுதியைச் சேர்ந்த சிலர் நாய்களை கரடி விரட்டிச் செல்வதை பார்த்துள்ளனர்.
கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, இரவில் குடியிருப்பு பகுதியில் கரடி சுற்றித்திரிந்தது தெரிந்தது.
இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிந்ததும், தளவாய்புரம் பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
புத்துார் மெயின் ரோடு பகுதிகளில் கரடியின் கால்தடம் தெரிந்ததை அடுத்து, வனத்துறையினர் புத்துார் கண்மாய் பகுதி புதர்களிடையே கரடி பதுங்கி இருக்கலாம் என, கூண்டுடன் தேடி வருகின்றனர்.
குடியிருப்பு பகுதியில் கரடி உலா வரும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியானதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.