ADDED : ஆக 07, 2024 07:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி சாட்சியாபுரத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் தாய் தந்தையை இழந்து ஆதரவற்ற மாணவி காயத்ரி தங்கி முதுகலை பட்ட படிப்பு முடித்தார்.
சிவகாசியில் உள்ள கல்வியியல் கல்லுாரியில் சேர்ந்த நிலையில் கட்டணத்திற்கு வழியின்றி சிரமப்பட்டார். இது குறித்து தகவல் தெரிந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாணவியின் கல்விச் செலவிற்காக இரு ஆண்டு படிப்பிற்கும் சேர்த்து தனது சொந்த நிதியிலிருந்து ரூ. ஒரு லட்சம் வழங்கினார்.