/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் போலீஸ் ஸ்டேஷனை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
/
சாத்துார் போலீஸ் ஸ்டேஷனை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
சாத்துார் போலீஸ் ஸ்டேஷனை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
சாத்துார் போலீஸ் ஸ்டேஷனை தரம் உயர்த்த எதிர்பார்ப்பு
ADDED : மார் 05, 2025 05:56 AM
சாத்துார்: சாத்துார் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குள் 48 கிராமங்கள் உள்ளன ஆனால் இவற்றை கண்காணிக்க 26 போலீசார் மட்டுமே பணியில் உள்ளனர்.
சாத்துார் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டுக்குள் 48 கிராமங்கள் உள்ளது.மேலும் என் எச் 44தேசிய நெடுஞ்சாலையின் தாலுகா போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் உள்ளது. அடிக்கடி விபத்து ஏற்படும் தேசிய நெடுஞ்சாலை உள்ள நிலையில் இரவு நேரத்தில் 48 கிராமங்களையும் 26 போலீசாரே ரோந்து சுற்றி வந்து கண்காணிக்க வேண்டிய நிலை உள்ளது.
டவுன் போலீஸ் ஸ்டேஷனில் 40க்கும் மேற்பட்ட போலீசார் உள்ள நிலையில் 48 கிராமங்களுக்கு 26 பேர் மட்டுமே என்ற நிலையில் தாலுகா போலீசார் பணி சுமைக்கு ஆளாகி வருகின்றனர். லீனியர் நிலையில் உள்ள தாலுகா போலீஸ் ஸ்டேஷனை மீடியம் நிலை போலீஸ் ஸ்டேஷனாக தரம் உயர்த்தினால் காவலர்கள் எண்ணிக்கை உயரும்.போலீசாரின் பணிச்சுமையும் குறையும் என போலீசார் கருதுகின்றனர்.
எனவே தாலுகா போலீஸ் ஸ்டேஷனை லீனியர் நிலையிலிருந்து மீடியம் ஸ்டேஷன் ஆக தரம் உயர்த்தி காவலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்திட வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.