/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின் வயரை சூளும் செடி, கொடிகளால் பாதிப்பு சீரமைக்க எதிர்பார்ப்பு
/
மின் வயரை சூளும் செடி, கொடிகளால் பாதிப்பு சீரமைக்க எதிர்பார்ப்பு
மின் வயரை சூளும் செடி, கொடிகளால் பாதிப்பு சீரமைக்க எதிர்பார்ப்பு
மின் வயரை சூளும் செடி, கொடிகளால் பாதிப்பு சீரமைக்க எதிர்பார்ப்பு
ADDED : மே 12, 2024 01:50 AM

விருதுநகர்:விருதுநகரில் ஊரகப்பகுதிகளில் மின் வயரை சூளும் செடி, கொடிகளால் மின் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகரில் இரு நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. ஏற்கனவே மார்ச் மாதம் முதல் மாவட்டத்தில் பராமரிப்பு மின்தடை ஏதும் செய்யப்படவில்லை. கோடையில் மக்கள் ஏ.சி., போடுவது அதிகரித்துள்ளதால் உயர்மின்னழுத்தால் டிரான்ஸ்பார்மர்கள் பழுதாகி ஆங்காங்கே மின்தடை பெரும் சிக்கலாக இருந்து வருகிறது. இந்நிலையில் கூடுதல் சிக்கலாக மின் வயரை சூளும் செடிகளும் அதிகரித்துள்ளன.
பொதுவாக விருதுநகர் ரோட்டோரங்களில் களை, செடிகள், கொடிகள் அதிகளவில் படர்ந்து காணப்படுகின்றன. இவை சில நேரங்களில் டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்களில் பரவி விடும். மிகவும் அரிதாக தான் மின் வயர்களில் படரும். நகர்ப்பகுதிகளில் இவ்வாறு நடந்தால் மின் ஊழியர்கள் உடனடியாக சரிசெய்து விடுவர்.
ஆனால் புற நகர் பகுதி, ஊரக பகுதிகளில் இது போன்று நடந்தால் மக்கள் புகார் அளித்தால் மட்டுமே தீர்வு. தற்போது பராமரிப்பு மின்தடை இல்லாத சூழலில் இது போன்ற மின்வயரை சூளும் செடி, கொடிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் கருப்பசாமி நகர் ரயில்வே காலனி அருகே இது போன்று மின்வயரை செடி, கொடிகள் சூழ்ந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில் கோடை மழை பெய்தால் மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது.