/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
நான்கு வழிச்சாலை பாலங்களில் உடைந்த இரும்பு ராடுகளால் அச்சம்
/
நான்கு வழிச்சாலை பாலங்களில் உடைந்த இரும்பு ராடுகளால் அச்சம்
நான்கு வழிச்சாலை பாலங்களில் உடைந்த இரும்பு ராடுகளால் அச்சம்
நான்கு வழிச்சாலை பாலங்களில் உடைந்த இரும்பு ராடுகளால் அச்சம்
ADDED : ஆக 30, 2024 05:45 AM

காரியாபட்டி : மதுரை - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ள பாலங்களில் இரும்பு ராடுகள் உடைந்து காணப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மதுரை தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் காரியாபட்டி மந்திரிஓடை அருகே தெற்காறு, வக்கணாங்குண்டு அருகே குண்டாறு, எட்டையாபுரம் அருகே வைப்பாறு உள்ளிட்ட ஆறுகளின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது.
பாலத்தின் ஒவ்வொரு பில்லர்களை இணைக்கும் இடத்தில் குறுக்கே இரும்பு ராடு பொருத்தப்பட்டிருக்கும். 14 ஆண்டுகளுக்கு மேலானதால் இரும்பு ராடு தேய்மானம் ஏற்பட்டு, ஆங்காங்கே உடைந்து வெளியில் நீட்டிக்கொண்டு இருக்கிறது. அதிவேகமாக வரும் வாகனங்கள் இரும்பு ராடால் இடையூறு ஏற்பட்டு, விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
அத்துடன் இணைப்பு இடத்தில் போடப்பட்ட கான்கிரீட்டுகள் பெயர்ந்து பள்ளமாக உள்ளது. இரவு நேரங்களில் வரும் டூவீலர்கள், கார் உள்ளிட்ட வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து செல்லும்போது பழுது ஏற்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
ரோடு படுமோசமாக குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்கள் சென்று வருவதில் பெரிதும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. விபத்து ஏற்படும் முன் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.