/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஸ்ரீவி.யில் குரங்குகளால் அச்சம்
/
ஸ்ரீவி.யில் குரங்குகளால் அச்சம்
ADDED : ஆக 17, 2024 12:49 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்தூரில் சுற்றி திரியும் குரங்குகளால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
செண்பகத் தோப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அதிகளவில் குரங்குகள் உள்ளன. இதில் அவ்வப்போது சில குரங்குகள் நகர் மேற்கு பகுதி குடியிருப்பு பகுதிகளில் நடமாடி வந்தது.
கடந்த மாதம் நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் 10க்கும் மேற்பட்ட குரங்குகள் கூட்டமாக நடமாட துவங்கியது. ஆண்டாள் கோயிலில் சுற்றித்திரிந்த 6 குரங்குகளை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர். அதன் பின்பு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடமாடி வந்த 2 குரங்குகளையும் வனத்துறையினர் பிடித்தனர்.
கடந்த சில நாட்களாக சில குரங்குகள் நகரின் பஜார் வீதிகள், தேரடி, குடியிருப்பு பகுதிகளிலும் நடமாடி வருகிறது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். குரங்கினை பிடித்து வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.