/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
இறந்த எஸ்.எஸ்.ஐ., குடும்பத்திற்கு நிதி உதவி
/
இறந்த எஸ்.எஸ்.ஐ., குடும்பத்திற்கு நிதி உதவி
ADDED : ஆக 13, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரியாபட்டி : காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷனில் எஸ். எஸ். ஐ., யாக பணியாற்றிய சங்கர்ராஜ் உடல்நலக் குறைவால் சில தினங்களுக்கு முன் இறந்தார். அவரது குடும்பத்திற்கு 1997ம் ஆண்டு 2ம் பேட்ஜ் எஸ். எஸ். ஐ., களால் நிதி திரட்டப்பட்டது.
அருப்புக்கோட்டை டி.எஸ்.பி., காயத்ரி தலைமையில், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ். ஐ., அசோக் குமார் முன்னிலையில், திரட்டப்பட்ட ரூ. 13 லட்சத்து 47 ஆயிரத்து 500ஐ அவரது குடும்பத்தினரிடம் வழங்கினர். போலீசார்கள் பலர் கலந்து கொண்டனர்.

