/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
தீப்பெட்டி அட்டை கம்பெனியில் தீ விபத்து
/
தீப்பெட்டி அட்டை கம்பெனியில் தீ விபத்து
ADDED : செப் 05, 2024 05:01 AM

சிவகாசி: சிவகாசி அம்மன் கோவில்பட்டி தெருவை சேர்ந்தவர் கணேஷ் 55. இவர் சிவகாசி - நரணாபுரம்ரோடு போஸ் காலனியில்சோனை டிரேடர்ஸ் என்ற பெயரில் தீப்பெட்டி குச்சி உரசும் அட்டை தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார்.
இங்கு நேற்று 3 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உராய்வு காரணமாகதிடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீப்பெட்டி தயாரிக்க தேவையான அட்டை, பாஸ்பரஸ், வார்னிஷ், சுண்ணாம்பு பவுடர், டர்பன்டைன் மருந்து கலவை உள்ளிட்ட பொருட்களுக்கும் தீ பரவியது.
தகவலறிந்து வந்த சிவகாசி தீயணைப்பு துறையினர் இரு தீயணைப்பு வாகனங்கள் மூலம் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தொழிலாளர்கள் உடனடியாக அறையை விட்டு வெளியேறியதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.