/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காரியாபட்டியில் கடையில் தீ விபத்து; 30 டூவீலர்கள், 2 லட்சம் எரிந்து நாசம்

ADDED : ஆக 09, 2024 12:15 AM

காரியாபட்டி: காரியாபட்டியில் பழைய டூவீலர் விற்பனை செய்யும் கடையில் அதிகாலை 1:00 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்தில் 30 டூவீலர்கள், ஆவணங்கள், ரொக்கம் ரூ.2 லட்சம் தீயில் எரிந்து நாசமாயின.
மதுரை இலுப்பகுளத்தை சேர்ந்த முத்துப்பாண்டி 32. காரியாபட்டியில் கள்ளிக்குடி ரோட்டில் அமலா அன்னை வளாகத்தில் கன்சல்டன்ஸி, பழைய டூவீலர் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு, 80 பழைய டூவீலர்களை கடைக்குள் நிறுத்திவிட்டு, பூட்டிச் சென்றார். அதிகாலை 1:00 மணிக்கு கடை தீ பிடித்து எரிந்தது.
காரியாபட்டி தீயணைப்பு வீரர்கள், நீண்ட போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அருகில் உள்ள டூ வீலர் ஷோரூமிற்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட டூவீலர்கள் முற்றிலும் எரிந்து சேதமாகின. மற்ற டூவீலர்களில் சீட் கவர் உதிரிபாகங்கள் உள்ளிட்டவைகள் தீப்பிடித்து பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. கடையில் வைக்கப்பட்டிருந்த ஆவணங்கள், கல்லாவில் இருந்த ரூ. 2 லட்சம் ரொக்கம் தீயில் கருகின.
தீயணைப்பு வீரர்கள் விவேகானந்தன் தலைமையில் தீயை அணைத்தனர். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் பார்வையிட்டார். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.